அன்பின் ஆழம்

என் கேள்விற்கும்
உன் பதிலுக்குமான
தூரமே
நம் அன்பின் ஆழம்.

Advertisements

நிஜம்

எங்கோ தொடங்கிய அந்த ஈர்பின்
தொடர்வாய் சுழன்ற என் எண்ண
ஓட்டத்தின் பிறழ்ச்சியின் வடிவமாய்
உன்னை நான் வடிவமைத்துக் கொண்டேன்,
எனக்கு பிடித்த மாதிரி,
உன் தவறில்லை தான்
நிஜத்தின் சுவரூபமாய் நீ
அப்படியில்லாதிருப்பது.

தோழி

தோழமைக்கு பாலினம் அவசியமில்லை
என்று புரியவைத்தாய்
ஒரு பெண்ணின் பல சங்கடங்களை
அறியாமலே வளர்ந்த என்னை  உன்
இயல்பான பேச்சால் அறிய  வைத்தாய்
பெண்மனதிற்கும் ஆண்மனதிற்குமான
இடைவெளியை உன் நேர் பார்வை
மூலம் சுருங்க வைத்தாய்
வரும் காலத்தில் என்
மகளை பார்கும் பொழுது
ஆச்சரியம் கொள்ளாதே உன்
எண்ணச் சாயல்கள் அவளிடம்
தென்படுகிறது என்று,
பெண்ணியத்தை முதல்முதலில்
எனக்கு கற்றுக் கொடுத்தவள்
நீ தான்,
ஆதலால் உன் பாதிப்பின் பிரதிபலிப்பு
அவளிடம் இருப்பது இயல்புதானே?

எனக்கென்று ஒரு வானம்

எனக்கென்று ஒரு வானம்
எட்டும் தூரத்தில் நட்சத்திரங்கள்
நடக்கும் மரங்கள்
நினைக்கும் பொழுது மழை
இதமான ஒரு வெயில்
குடையென மேகங்கள்
ஏணியாய் வானவில்
ஆனந்தமூட்ட பனி தூறல்கள்
ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டேன்
சின்னஞ்சிறு இதயங்களின்
கனவு பட்டறைகளை.