தொடக்கம்

புரிகின்ற தருணத்தில்
தொலைகின்ற காதலாய்
உணர்கின்ற பருவத்தில்
இழந்திடும் பாசமாய்
பார்க்கின்ற நொடியினில்
மறைகின்ற கானலாய்
தொடுகின்ற சமயத்தில்
நெடுகின்ற வானமாய்
பொழிகின்ற வேளையில்
கலைகின்ற மேகமாய்
என் தேடல்களின் முடிவுமே
இன்னொரு தொடக்கமாய்