முடிக்கப்படாத ஓவியம் நான்
முடிவறியா தொடக்கமும் நான். ..
பகிரபடாத பதில் நான்
பார்த்த நொடியின் கேள்வியும் நான். ..
ஆழ்மனதின் ரகசியம் நான்
அறியப்படாத அந்தரங்கமும் நான். ..
கைக்குகிட்டா ஆசை நான்
அலைபறிக்கும் மனதின் ஓசையும் நான். ..
அறிந்தும் உணரா பொருள் நான்
அலைக்கழிக்கும் வாழ்வின் அர்த்தமும் நான். ..
புலர்ந்த பொழுதின் புனிதம் நான்
பொருள் உணரா கவிதையும் நான். ..