வாழ்க்கை வரம் , வாழ்வே சாபம்…

இன்பமும் துன்பமும்

உணர்த்திடும் உணர்வாய்

சிரிப்பும் கண்ணீரும்

வெளிப்படும் கருவியாய்

வெற்றியும் தோல்வியும்

பயில்விற்கும் பாடமாய்

அன்பும் வெறுப்பும்

பழகும் உறவாய்

உயிர்த்த நொடியின்

அழுகையும்

நிறுத்திய சுவாசத்தின்

 மௌனமும்

வாழ்க்கை வரம்

வாழ்வே சாபம்.

Advertisements

மௌனம்

 உன் மௌன போராட்டத்தின்

வெளிப்படா ஒலியின்  மொத்தமாய்

 வரும் ஒரு விசும்பலின்  பின்பான

அமைதி …

எனை மெதுவாய்

கொல்லும் நஞ்சு.

வளியின் மிச்சத்தில்……..

அலைகடலில் சிக்கிய

சுழற்சியின் சுவடாய்,

ஓய்வில்லா போராட்டத்தின்

முடிவான தோல்வியாய்,

நிசப்தத்தின் ஒலியில்

வெளிப்படும் இசையாய்,

கண்மூடிய கனவின்

இருளின் காட்சியாய்,

சுவாசிக்கும் அவசியத்தில்

அகப்படும் கருவாய்,

எண்ண துகள்களில்

சிதரிடும் திகழாய்,

வலியின் உச்சத்தில்

இதழின் விரிப்பாய்,

என் வெளியேறும் மூச்சின்

வளியின் மிச்சத்தில் நீ……….


சயம் கொண்ட என்னை…….

சலனமில்லா மனதின்

சாயல்களை அழித்து

சபலங்களை விதைத்து

சாவில்லா தொடர்பாய்

சஞ்சலங்களை ஏற்படுத்தி

சால மகிழ்ந்து

சலிப்பென்று உணர்ந்து

சாட்சியாய் விலகி

சத்தமில்லாமல் எரித்து

சாபத்தை தொடுத்து

சருகாய் கருகிய

சாம்பலில் தேடுகிறேன்

சமிக்ஞையால் கொன்று

சாதித்து மீண்டு

சயம் கொண்ட என்னை……

நான் சூரியன்….

நான்  சூரியன்,

அடை மழையாய் என்னை அமுக்கிவிடாதே

சிறு தூறலாய்  என்னை   அணைத்துக்கொள்

எண்ணற்ற வானவில் உள்ளது என்னிடம்,  வெளிப்பட……..

ஒரு புத்தகம்

ஒரு கேள்வியின் பதிலாய்

ஒரு தேடலின் முடிவாய்

ஒரு போராட்டத்தின் முற்றாய்

ஒரு குழப்பத்தின் தெளிவாய்

ஒரு சோகத்தின் விடியலாய்

ஒரு சந்தர்ப்பத்தின் அவசியமாய்

பல நேரங்களில் ஆகிவிடகிறது

நாம் வாசிக்கும்  ஒரு புத்தகம்.