இன்று ஒரு நாள் மட்டும்
அடையாளம் கலை
ஒரு மனிதத்தின் கூட்டில் வாழ்,
இருவரும் ஒரு உணவை
சேர்ந்து உண்போம்
ஒரு உணர்வை
சேர்ந்து உணர்வோம்
ஒரு படகில்
சமமாக நீல் கடலில்
நீண்ட ஆகாசத்தின்
கீழ் பயணிப்போம் ,
ஒரே காற்றை சுவாசித்து
ஒரு நாள் ஒரு பொழுதேனும்
இந்த பிறப்பின் பேரின்ப
ரகசியத்தை உரக்கச் சொல்வோம். ..