அன்பெல்லாம் காதலே…

காதலை கொச்சைப்படுத்தாதீர்,

அது அழகானது,

ஆக்கப்பூர்வமானது,

இதயம் மேன்மையுரச் செய்துவது,

உலகை இயங்கச் செய்வது,

மென்மையான அதிர்வலைகளைக்

கொண்டது,

அன்பெல்லாம் காதலே,

நட்பாய் , பாசமாய், பிரியமாய்,

சிநேகமாய்,

பற்பல பரிமாணங்களைக் கொண்டது,

பழகும் பொழுதும் பிரியும் பொழுதும்

சுகமானது,

சோகங்களுடனும் எண்ணங்களை

விரியச்செய்வது,

வலிகளை கடக்கும் பொழுதும்,

மனதை வலிமையாக்குவது,

அன்பின் அடித்தளத்தை

உணரச்செய்வது,

பிரியத்தின் பிடிமானங்களை

பரவச் செய்வது,

நட்பின் நாகரீகத்தை

நம்பச் செய்வது,

ஆதலால் கொச்சைப்படுத்தாதீர்

காதலால் கொன்றேன் என்று…

Advertisements

உனதாய் நான் பிறப்பானேன்…

இரு நாடியாய் நம் இதய துடிப்பு

இணைந்தொலித்த உன்னத

தருனத்தில் ,

நானும் புது பிறப்பெடுத்தேன்.

உன் வளர்ச்சியின் பொருட்டு

என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்

என் இதயத்தையும் சேர்த்தே

விரியச் செய்தது.

பெற்றெடுத்த நொடியின் புனிதம்

உன்னையே சாரும்

என்னை நீ தேர்ந்தெடுத்தற்காக.

இந்த உலகின் சுழற்சியின் எனதான

கடமையாய் மட்டுமே இல்லாமல் ,

என்னுள் நீ ஏற்படுத்தும்

சுய மேன்மையின் முதல் படியே ,

இந்த தாய்மை உணர்வு.

கேள்விகளுக்கு அப்பாற்பட்ட

தெய்வத்தின் ஒப்பீடில்லாமல்,

என் குறை நிறைகளை

ஈடுசெய்யும் ஒரு சகமனுஷியாய்

உன் கைகோர்த்து நடக்கும்

வாய்ப்பு போதும் எனக்கு

இந்த வாழ்வை இரசிக்க.

கற்றுத் தரும் பொருட்டே நானும்

உன்னுடன் இவ்வாழ்க்கையை

கற்றுக்கொள்ளகிறேன்.

உன் கண்ணசைவும்

சிறு நகையும் என்

ஆற்றலின் குறியீட்டு கருவி.

உன் இதழ் தொடும் ஸ்பரிசமே

என் செயல்திறன் பரிசு.

என் இதயம் வழிய வழிய

நீ என்னிடம் கொடுக்கும்

உன் ஒட்டுமொத்த அன்பே

நான் இந்த உலகில்

பரப்பும் பேரானந்தம்…

என் செய்வேன், என் நெஞ்சே…

சுயம் தேடிய பொழுதுகளில்

வார்த்தைகளின் வசவுகளால்

வாடிய பொழுதுகளில்

வாஞ்சையாய் நீட்டிய முதல்

கையில் என்னை மீட்பேனா?

முகம் தெரியா தோழிகளின்

வன்கொடுமை பதிவுகளில்

மீட்டெடுத்த சுதந்திரத்தின்

படுகொலைக்கு துடிப்பேனா?

சிரித்தொழுகா சிறு இதழ்களின்

இருகிய முகத்தின்

சொல்லொண்ணா வேதனையில்,

மரித்த மனிதத்திற்கு

ஒப்பாரி வைப்பேனா?

பெண்களை தெய்வமாக்கி

கற்கள்தான் என நினைத்து

உயிர்ப்பின் சுவாசத்தை

கழுத்தறுக்கும் சமுதாயத்தில்

பொய்யான ஓர் அங்கமாய்

ஆறுதல் தான் தேடுவேனா?

என் செய்வேன்

என் நெஞ்சே…

கனக்கும் இதயத்தை

சுமக்கும் பொழுதுகளில்

பாரம் தாங்காமல்

நானும் தான்

இறக்கி வைக்க துணிவேனா?

இரவின் ஓலங்கள்…

இருட்டின் ஓலங்கள்

உறங்கா இரவுகளின்

இம்சிக்கும் சஞ்சலங்களாய்

உரைக்கும் உண்மைகளின் இறுக்கம்

அவிழ்கும் இரணங்களின்

உறைந்த குருதியின் ஒளிந்த

உண்மைகளின் கனம் போதும்

இரு விழியும் சேராமல் நனைய…

வாழ்க்கை வரம் , வாழ்வே சாபம்…

இன்பமும் துன்பமும்

உணர்த்திடும் உணர்வாய்

சிரிப்பும் கண்ணீரும்

வெளிப்படும் கருவியாய்

வெற்றியும் தோல்வியும்

பயில்விற்கும் பாடமாய்

அன்பும் வெறுப்பும்

பழகும் உறவாய்

உயிர்த்த நொடியின்

அழுகையும்

நிறுத்திய சுவாசத்தின்

 மௌனமும்

வாழ்க்கை வரம்

வாழ்வே சாபம்.

ஓர்  மௌனி…

உயிர் பிழையின் 

ஒலியில்லா வடிவம் நான்,

உடலினை ஊனப்படுத்தி

என்னுள் ஓலமிடும்

உண்மைகளின் சுவாசத்தை

காத்தெடுக்கும் முயற்சியின்

உந்துதலே என் வேடம்

ஆம் , நான் ஊமையல்ல

எரிமலைகளை உள்ளடக்கிய

ஓர்  மௌனி…

காலத்தின் சூசகங்கள்…

இதழ் தொடும் புன்னகைக்கு முன்

கண் தொடும் சோகமாய்,

இதமான வெயிலும் உறைந்திடும்

இதயமாய்,

கோடி இன்பத்திலும் ஒளிந்திருக்கும்

துன்பமாய்,

விரிந்த கடலிலும் மிதக்கின்ற

கானலாய்,

ஒளிப்படர்ந்த வெளியிலும் இருளும்

மூலையாய்,

தித்திக்கும் அமிர்தத்திலும் திகட்டும்

துளி நஞ்சாய்,

வெற்றியின் படிகளில் சிறு சிறு

முட்களாய்,

வாழ்க்கையின் பல சாபங்கள்,

காலத்தின் சூசகங்கள்…