மலர் தீண்டிய காற்றாய்
என்னுள் உன் வாசம்
குருதியின் பிழையாய்
என் நரம்பில் உன் துடிப்பு
உன்னை பார்க்கும் பொழுதில்
நொடி தொட மறுக்கும் என் இமை
என் வரமாய் வந்த ஒரு சாபமோ…
என் மொழியில் வந்த ஒரு பிழையோ…
வரம்பை மீறிய ஒரு இலக்கனமாய்…
என் உயிரை தீண்டிய ஒரு நஞ்சாய்..
பிரிவின் வலியில் ஒரு வலிமையாய்…
இறந்த பின்பும் ஒரு துடிப்பாய்…
வாழ்வின் வரமாய் நீ வந்தாய்…
எனை நான் உணர…
பிரிவின் சாபங்கள் தான் தந்நாய்…
உனை நான் நீங்க. ..
உனை ரகசியமாய என்னுள் வைத்து
காத்திடவா இல்லை
இருளில் கண்ணீரில் வடித்திடவா
சேரா துயரில் மூழ்கிடவே
உனை சுவாசித்து எனைதான்
மீட்டிடவா
கரையில்லா இந்த காதலில் நானும் கரைந்திடவே…