காத்திருப்பில் கடக்கிறது…

அறக்க பறக்க ஓட்டம் இல்லை

ஆறி உலர்ந்த உணவும் இல்லை

கடிகார முள்ளுடன் போட்டி இல்லை

அயர்ந்த உறக்கமும் இல்லை

அறுபதை கடந்து எழுபதை துரத்தும்

காலகட்டம்

கைப்பேசி அழைப்பின் காத்திருப்பில்

கடக்கிறது…