நிழலாடும் நித்திரைகள்…

நித்திரையின் நிசப்ததில்

ஒரு தேடல்

கனவோ… இல்லை

நிஜத்தில் நிழலோ

எதுவோ அது…

துரத்தும் மனமோ

மயங்கும் நிலையில்…

ஆர்பரிக்கும் அர்த்தங்கள்

நிறத்தின் நிர்வாணமாய்…

கலங்கும் அறிவோ

ஓலங்களின் உச்சரிப்பாய்…

இளமை கடந்த முதிர்ந்த இதயம்

இயல்பாய் இயங்க எத்தனிக்கும்

போராட்டமாய்…

நிழலாடும் நித்திரைகள்

சாபங்களின் களம்…