காதல் என்றால்
ஒரு பதின் பருவ மனதின் கேள்வி
எங்கு உன் சுயம்
சிதையாமல் இருக்கிறதோ
யாருடன் நீ பாதுகாப்பாய்
உணருகிறாயோ
எந்த ஒரு தொடுதலில்
நீ அனிச்சையாக
விலகவில்லையோ
எந்த ஒரு பிரிவு
காலம் நீள உணரச்செய்கிறதோ
அதுவே காதல் என்றேன்
அப்படி என்றால் காமம்
அது ஒரு மனதின் பசி
உடலின் தேவை
மனித சுழற்சியின் அவசியம் என்றேன்
அப்படி என்றால் காதலுக்கும்
காமத்துக்குமான தொடர்பு
காதலில்லா காமம்
வாய்க்கப்பட்ட வேதனை
காமமில்லா காதல்
வகுக்கப்பட்ட கண்ணியம்
காதலுடன் காமம்
உன்னதம் என்றேன்.

Advertisements