ஒரு சொல்
ஒரு பார்வை
ஒரு அணைப்பு
ஒரு கண்ணீர்
உணர்த்தியிருக்கும் அன்பின்
பிடிமானத்தை
ஆனால் ஏதோ
ஒன்று தடுத்து
அவரவர் ஆணவத்தை
வெற்றியடையச் செய்துவிட்டது
இன்று இறுகிய மனிதர்களாய்
கடந்து போன காலங்களின்
கைதிகளாகிப் போன
மனதின் பாரத்தை
சுமந்தபடி மீண்டும்
ஒரு சந்தர்ப்பதிற்காக…………….

Advertisements