உன்னையே நீ உணராத பொழுதுகளில்
எனை உண் கண்கள்
அலைமோதி தேடிய ஒவ்வொரு
தருணங்களும் அதை எதிர்நோக்கியே
காத்துக்கிடந்தது என் கண்களும்
வாழ்வின் கட்டாயத்தில்
சிக்கி பல காட்சிகளை
கண்டுவிட்ட போதிலும்
என்னை கடக்கும் தருணங்களில்
ஒரு நொடி தாமதிக்கிறது
உன் கண்ணின்மணிகள்
இதையும் எதிர்நோக்கியே
காத்துகிடக்கிறது என் பார்வை
சொல்லாத வரிகளின்
மொத்ததையும் சுமந்துக் கொண்டு…….

Advertisements