ஒவ்வொரு புன்னகையும்
தொடருமாயின்
ஒவ்வொரு உதவியும் அடுத்தவர்
கை சேருமாயின்
ஒவ்வொரு கல்வியும் இன்னுமொரு
அககண்ணை திறக்குமாயின்
ஒவ்வொரு சமையலும் யாரோ
ஒருவரின் பசியாற்றுமாயின்
ஒவ்வொரு துப்பரவும் பலருடைய
சுகாதாரம் காக்குமாயின்
ஒவ்வொரு எழுத்தும் எங்கோ
ஒருவரை சிந்திக்கவைக்குமாயின்
ஒவ்வொரு தொழிலும் வாழும்
மானிடத்தின் வாழ்வை
இலகுவாக்குமாயின்
எல்லாமும் அவசியமே
இந்த உலகம் இன்புற்றிருக்க.

Advertisements