நினைவுகள்

இசையின் உயிர்பில்
இறுகிய இதயத்தில்
எத்தனையோ அதிர்வுகள்
காலங்கள் பல கடந்தபின்னும்
தொட்டுவிடும் தூரத்தில்
நினைவுகள் நிழலாட
மூடிய கண்களுக்குள்
காட்சிகளை மறைக்கின்றது
நீர் சலனங்கள்.