அழுது அழிச்சாட்டியத்துடன்
நான் சென்ற பள்ளியின்
முதல் நாள் உலகமே
எனக்கு எதிரியாய் தெரிய
நீ வந்து என் அருகில்
அமர்நத நொடியில்
மலர்ந்த நட்பென்னும்
பூவிற்கு எங்கிருந்து
ஊற்றெடுத்து பாய்ந்தது
தண்ணீர் தெரிந்ததில்லை
இன்றுவரையும் கூட
ஆனால் அன்று
நீயும் அந்த வகுப்புமே
மொத்த உலகத்தின்
பிரதிபலிப்பாய் கவலைகள்
இல்லா கோல்லோட்சி நடத்தி
அவரவர் பெயர் மட்டுமே
மகுடமாய் சூடி
எதிர்பார்ப்பு இல்லா
அன்பை ஆபரணமாய் பூட்டி
நாம் ஆண்ட நட்பின்
அரசாங்கத்தை கடந்து
முகிளத்தில் பதிர்ந்துவிட்ட அந்த
முகத்தின் அடையாளத்தை
மட்டுமே சுமந்து
இந்த உலகத்தில் சஞ்சரித்து
பற்பல பரிபாலனங்களை
ஏற்ற பின்பும்
நாம் சந்திக்கும் பொழுதில்
எப்படியோ வந்து
சூழ்ந்து கொள்கிறது
நம்முடைய பழைய
இராஜாங்கம்.

Advertisements