கேள்விகளே பதில்களாய்
பதில்களே கேள்விகளாய்
விளங்கும் இந்த
பயணத்தின் சாலைகளில்
வெண்ணிற மேகமாய் மூடும்
ஐயங்களின் தொகுப்புகளில்
எதைத் தேடி எதைக் கண்டு
எதை இரசித்து எதை வெறுத்து
எதை மகிழ்ந்து எதை வருந்தி
எதை ஏற்று எதை விடுத்து
எதை காண முற்படுகிறோம்?

Advertisements