சுயம் மீறிய ஆசை

பறக்கும் பட்டாம்பூச்சியின்
நிறத்தை பூசிக்கொண்டேன்
நிமிர்ந்து பார்க்கையில்
பூவின் நிறம் அழகாய் தெரிந்தது
அதையும் விட மனசில்லை
அப்பிக்கொண்டேன்
சற்று தொலைவில்
வண்ணச் சிறகுகளுடன் மீன்கொத்தி
எட்டிப் பிடித்து குழைத்து
தடவி நிமிர்கையில்
மரத்தின் பச்சையும்
வானின் நீலமும்
என்னை ஆட்கொண்டன
அதையும் விட்டுவைக்காமல்
இட்டுக்கொண்டேன்
பரவசமாய் ஓடிச் சென்று
பிம்பம் பார்கையில்
எந்த நிறமும் படியா இடம் காட்டி
கண்ணாடிச் சொன்னது
அழகான நிறமென்று.