பிடித்த வேலைக்கும்
கிடைத்த வேலைக்குமான
முரணில் தொடங்கி
வாழ்கையில் நம்
சுயமும் சந்தர்ப்பமும்
முட்டிக் கொள்ளும்
நிலைகளே நிறைந்துள்ளது
அத்யாவசியம் தொடங்கி
பொழுதுபோக்கு வரை
யாரோ தீர்மானித்ததைச் செய்யும்
நூல்கொண்ட பொம்மைகளாக நாம்
காலத்தின் கைதிகளாக.

Advertisements