தொலைத்த வாக்கியங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தமிழ் மட்டுமே பரிச்சியமான
தாயுடம் போனதா?
ஆங்கிலம் அறவே அறியா
பாட்டியுடன் போனதா?
கொஞ்சமே என்றாலும்
தமிழிலேயே பேசிய
தந்தையுடன் போனதா?
ஆங்கிலம் கலக்காமல்
பேசிய வாக்கியங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீட்டெடுத்து என்
பிள்ளைகளிடம் சேர்க்க.

Advertisements